2009 ஆம் ஆண்டு இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் வெளியான “தேவ் டி” படத்தில் அறிமுகமானவர் கல்கி கோச்சிலின். புதுச்சேரியில் பிறந்த இவர் பெருமளவில் இந்தி படங்களில் நடித்து வந்தார்.
பாலிவுட்டின் புகழ்பெற்ற படங்களான “ஜிண்தகி நா மிலெகி தோபர” மற்றும் “யே ஜவானி ஹாய் திவானி” மூலம் தன் நடிப்பு திறமையால் ரசிகர்களை ஈர்த்தார்.
2011 ஆம் ஆண்டு இயக்குனர் அனுராக் கஷ்யபை திருமணம் செய்து கொண்டவர், சில கருத்து வேறுபாடு காரணங்களால் 2015ம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர்.
இவர் தமிழில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான “நேர்கொண்டபார்வை” படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது தாயாக மாறி இருக்கும் கல்கி, தனது குழந்தைக்கு தமிழ் தாலாட்டு பாடல் ஒன்றை பாடி உறங்க வைப்பது போன்று வீடியோவை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. தற்போது தனது காதலன் கை ஹர்ஸ்பெர்க்குடனும் தன் குழந்தையுடன் இருக்கும் கல்கி, தன் குழந்தை சேப்ஃபோவை உறங்க வைப்பதற்காக பலமொழிகளில் தாலாட்டுப் பாடுகிறார்.
https://www.instagram.com/tv/CCqyKDEB6Gi/?igshid=1hgcgbs8niefb
அவர் குறிப்பிட்டுள்ளதாவது “எனக்கு அவ்வளவாக இசை ஞானம் இல்லாததால் ஒரிஜினல் பாடலை அப்படியே பாடியுள்ளேன். தமிழ் தாலாட்டு என் குழந்தையை விரைவில் உறங்க வைக்க மிகவும் உதவிகரமாக இருக்கிறது” என்கிறார் கல்கி.