பீச்சில் கவர்ச்சி போஸ் கொடுத்த கனிகா… வைரலாகும் புகைப்படங்கள்!

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கனிகா. இவருக்கு தமிழில் அமைந்த முதல் படத்தின் தயாரிப்பாளர் மணிரத்னம் தான். அது தான் ‘5 ஸ்டார்’ திரைப்படம். இந்த படத்தில் ஹீரோவாக பிரசன்னா நடித்திருந்தார். இப்படத்தை இயக்குநர் சுசி கணேசன் இயக்கியிருந்தார்.

இப்படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகை கனிகாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘எதிரி, ஆட்டோகிராஃப், டான்ஸர், வரலாறு, ஓ காதல் கண்மணி’ என தமிழ் படங்கள் குவிந்தது. கனிகா தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

இப்போது, கனிகா நடிப்பில் தமிழ் மொழியில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, விக்ரமின் ‘கோப்ரா’, நரேனின் ‘குரல்’ என மூன்று படங்களும், மலையாள மொழியில் இரண்டு படங்களும் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், கனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான புது ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

Share.