தல அஜித்துக்கு கஸ்தூரியின் பிறந்தநாள் வாழ்த்து…!

  • May 1, 2020 / 10:07 AM IST

அஜித் ரசிகர்களுடன் குடும்மிப்பிடி சண்டை போட்டு வந்த கஸ்தூரி, தற்போது அஜித்திற்கு வாழ்த்து மடல் ஒன்றை எழுதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

KING OF MASS என அழைக்கப்படும் அஜித் அவருடைய 49வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தல அஜித் குமாருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் நடிகை கஸ்தூரி தனது முகநூல் பக்கத்தின் மூலம் தனது வாழ்த்து மடலை வெளியிட்டுள்ளார். கடந்த சில நாட்களாக அஜித் ரசிகர்களுடன் கடும் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்தார். மேலும் அவர்களை கண்டிக்க கோரி அஜித்திற்கும் அவர் பல முறை வேண்டுகோள் விடுத்து வந்தார். ஆனால் இதையெல்லாம் அஜித் கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் கஸ்தூரி வெளியிட்டுள்ள வாழ்த்து மடலில் “50 ஆவது வயதில் அடியெடுத்து வைக்கும் ‘தல’ அஜித்குமார் அவர்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள். தமிழில் சினிமாவில் நிலையான வெற்றியை பெறுவது அனைவருக்கும் கைகூடுவதில்லை. அயராத உழைப்பு, அசராத தன்னம்பிக்கை, அத்துடன் கொஞ்சம் அதிர்ஷ்டம் இதுதான் அஜித்குமார்.

யாருக்கும் வாரிசு இல்லை. தானே படம் தயாரிக்கவில்லை. எந்த பின்புலமும் இல்லாமல், யாரின் பக்கபலமும் இல்லாமல் உழைப்பு ஒன்றையே மூலதனமாக வைத்து உச்சத்தை தொட்ட அஜித் குமார் பிறந்தது உழைப்பாளர் தினத்தில் என்பது எவ்வளவு பொருத்தம் !. பொது வாழ்க்கையில் எப்படி ஒரு தலைமுறைக்கு உதாரணமாக திகழ்கிறாரோ, சொந்த வாழ்க்கையிலும் உதவும் நேர் கொண்ட பார்வைக்கும் முன்னுதாரணமாக உள்ளார். அவரின் அபிமானிகள் அவர் வழியில் அன்பாகவும் கண்ணியமாகவும் நடப்பதே அவருக்கு கொடுக்கும் மிக சிறந்த பரிசு”, என்று கூறி தனது வாழ்த்து மடலை முடித்துள்ளார்.

இதை பார்த்த அஜித் ரசிகர்கள் “என்ன எதிரி சமாதான கொடியை பறக்கவிட்டு வர்றாப்பல…!” என்ற ரீதியில் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus