லெஜண்ட் சரவணனின் ‘தி லெஜண்ட்’ படத்தை கலாய்த்து ட்வீட் போட்ட நடிகை கஸ்தூரி!

  • July 31, 2022 / 12:36 AM IST

‘சரவணா ஸ்டோர்ஸ்’ லெஜண்ட் சரவணன் ஹீரோவாக நடித்து, தயாரித்துள்ள படம் ‘தி லெஜண்ட்’. இந்த படத்தை இயக்குநர்கள் ஜேடி – ஜெர்ரி இணைந்து இயக்கியுள்ளனர். இந்த படம் கடந்த ஜூலை 28-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.

இதில் மிக முக்கிய ரோல்களில் கீத்திகா, ஊர்வசி ரவுத்தேலா, விவேக், நாசர், பிரபு, விஜயக்குமார், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார், ரூபன் படத்தொகுப்பாளராகவும், எஸ்.எஸ்.மூர்த்தி கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளனர், பட்டுக்கோட்டை பிரபாகரன் வசனம் எழுதியுள்ளார்.

இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் லெஜண்ட் சரவணனின் நடிப்பை கிண்டலடித்து கலாய்த்த வண்ணமுள்ளனர். கடந்த 2 நாட்களில் இப்படம் உலக அளவில் ரூ.1.50 கோடி வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், இந்த படத்தை கலாய்க்கும் வகையில் பிரபல நடிகை கஸ்தூரி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் “சிவாஜி கதை. சிட்டி ரோபோ ஹீரோ. நான் ரொம்ப ரசித்து பார்த்தேன்” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus