அடேங்கப்பா… நடிகை கௌசல்யாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கௌசல்யா. இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘காலமெல்லாம் காதல் வாழ்க’. இந்த படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகை கௌசல்யாவிற்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘நேருக்கு நேர், ஜாலி, ப்ரியமுடன், சொல்லாமலே, பூவேலி, உன்னுடன், ஆசையில் ஓர் கடிதம், வானத்தைப்போல, ஏழையின் சிரிப்பில், தை பொறந்தாச்சு, மனதை திருடிவிட்டாய், திருமலை, நட்பே துணை’ என படங்கள் குவிந்தது. கௌசல்யா தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

42 வயதான கௌசல்யா இதுவரை திருணம் செய்து கொள்ளவில்லை. இப்போது, கௌசல்யா தமிழில் ‘காதலிக்க யாருமில்லை’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் ஹீரோவாக ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கிறார். இந்நிலையில், நடிகை கௌசல்யாவின் சொத்து மதிப்பு ரூ.7 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Share.