சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கிரண். இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘ஜெமினி’. இதில் ‘சீயான்’ விக்ரம் ஹீரோவாக நடித்திருந்தார், இதனை இயக்குநர் சரண் இயக்கியிருந்தார்.
இந்த படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகை கிரணுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘வில்லன், அன்பே சிவம், திவான், பரசுராம், வின்னர், தென்னவன், நியூ, வாடா, ஜக்குபாய், சகுனி, ஆம்பள, முத்தின கத்திரிக்கா’ என படங்கள் குவிந்தது.
கிரண் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். 42 வயதான கிரண் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
தற்போது, இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான ஸ்டில்லை வெளியிட்டுள்ளார். இந்த ஹாட்டான ஸ்டில் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.