பழம்பெரும் நடிகை KPAC லலிதா காலமானார்… வருத்தத்தில் திரையுலகினர்!

  • February 23, 2022 / 11:43 AM IST

சமீப காலமாக தொடர்ச்சியான மரணங்கள் ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும் அதிர்ச்சியைத் தருகிறது. பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், பிரபல காமெடி நடிகர்கள் விவேக் – பாண்டு – நெல்லை சிவா – மாறன், பிரபல இயக்குநர்கள் எஸ்.பி.ஜனநாதன் – தாமிரா, பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி.ஆனந்த், கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், பாடகி லதா மங்கேஷ்கர் என ரசிகர்களுக்கும், திரையுலக பிரபலங்களுக்குமே பிடித்தமான நபர்களின் இழப்பு அதிர்ச்சியளிக்கிறது.

இந்த சூழலில் இன்னொரு மரணச் செய்தி வந்திருக்கிறது. சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் KPAC லலிதா. இவர் தமிழில் ‘ராஜ பார்வை, காதலுக்கு மரியாதை, சிநேகிதியே, அலைபாயுதே, உள்ளம் கேட்குமே, சுயேட்சை MLA, பரமசிவன், கிரீடம், காற்று வெளியிடை’ போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகை KPAC லலிதா தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் மலையாளம் மொழியிலும் பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இவருடைய கணவர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசனின் ‘தேவர் மகன்’ படத்தை இயக்கிய பரதன் என்பது குறிப்பிடத்தக்கது. பரதன் 1998-ஆம் ஆண்டு காலமானார். தற்போது, 74 வயதான நடிகை KPAC லலிதா நேற்று உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என தகவல் கிடைத்துள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus