தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான குஷ்பூ தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவர் இயக்குனர் மற்றும் நடிகர் சுந்தர்.சியை திருமணம் செய்து இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள்.
தனது ரசிகர்களுடன் சமூக வலைத்தளம் மூலம் எப்பொழுதும் டச்சுலேயே இருக்கும் குஷ்பூ, அழகு பராமரிப்பு சார்ந்த விஷயங்களை அவ்வப்போது தனது ரசிகர்களுடன் பகிர்ந்து வந்தார்.
சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகிய நடிகை குஷ்பு குறித்து செய்திகள் வெளிவந்தன. தற்போது அவர் தான் கொரோனா டெஸ்ட் எடுத்துக் கொண்டதாகவும் அதிக அளவில் கூட்டங்களில் இருப்பதால் அவ்வப்போது பாதுகாப்பு கருதி இந்த டெஸ்ட்டை அவர் செய்து கொள்வதாகவும், தற்போது அவர் செய்து கொண்ட டெஸ்ட் ரிசல்ட் வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த டெஸ்ட் ரிசல்டில் இவருக்கு நெகட்டிவ் வந்துள்ளதாகவும் இதற்காக இறைவனுக்கு நன்றி என்றும் அவர் கூறியிருக்கிறார்.
I got tested for #Covid for the 3rd time as a precautionary measure as I have been traveling and been in crowds. Have tested negative again. Thanks to your goodwill and blessings. 🙏🙏🙏
— KhushbuSundar (Modi ka Parivaar) (@khushsundar) October 22, 2020