தமிழ்சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகை லட்சுமிமேனன்.
2012ஆம் ஆண்டு வெளிவந்த “சுந்தரபாண்டியன்” மற்றும் “கும்கி” திரைப்படங்கள் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இந்த இரண்டு படங்களுமே இவருக்கு வெற்றியைத் தேடித் தந்ததால் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்க கமிட்டானார் லட்சுமிமேனன்.
குட்டிப்புலி, நான் சிகப்பு மனிதன், பாண்டியநாடு, மஞ்சப்பை, ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம், மிருதன், ரெக்க என்று தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வெற்றி வாகை சூடி உள்ளார்.
தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர் 2017 ஆம் ஆண்டு பிரேக் எடுத்து தனது கல்லூரிப் படிப்பை முடித்தார். இந்த சமயங்களில் சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் லட்சுமிமேனன் தற்போது தான் பரதம் ஆடுவது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு இணையதளத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளார்.
மேலும் சமீபத்தில் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்ளவில்லை இதைச் சுற்றி வரும் அனைத்து செய்திகளும் பொய்யானது என்று மிகவும் கோபத்துடன் இணையதளத்தில் பதிவிட்டிருந்தார்.
https://www.instagram.com/p/CFkAjbeDHO5/?igshid=bkwk9phaplqq
https://www.instagram.com/p/CFj_-gtDy3m/?igshid=13mqgbtzmbpqt