Mahima Nambiar : நடிகை மஹிமா நம்பியாரின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

  • December 23, 2023 / 01:06 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் மஹிமா நம்பியார். இவருக்கு முதல் படமே மலையாள மொழியில் தான் அமைந்தது. அது தான் ‘கார்யஸ்தன்’. இதில் ஹீரோவாக திலீப் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து 2012-ஆம் ஆண்டு ‘சாட்டை’ படம் மூலம் தமிழ் மொழியில் என்ட்ரியானார் மஹிமா நம்பியார்.

‘சாட்டை’ படத்துக்கு பிறகு நடிகை மஹிமா நம்பியாருக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘என்னமோ நடக்குது, மொசக்குட்டி, அகத்திணை, குற்றம் 23, புரியாத புதிர், அண்ணாதுரை, கொடிவீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள், அண்ணனுக்கு ஜே, மகாமுனி, அசுரகுரு, ஐங்கரன், ஓ மை டாக், ரத்தம், சந்திரமுகி 2, நாடு’ என தமிழ் படங்கள் குவிந்தது.

இப்போது இவர் நடிப்பில் 2 மலையாள படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி நடிகை மஹிமா நம்பியாரின் பிறந்தநாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். தற்போது, இவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுத்த ஸ்டில்ஸ் மற்றும் வீடியோஸ் வெளியாகியுள்ளது.

Read Today's Latest Gallery Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus