“உங்களுடன் நடிக்க விருப்பம்”- நடிகை மாளவிகா மோகனன்
July 29, 2020 / 05:40 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களிடையே தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகை மாளவிகா மோகனன்.
2013 ஆம் ஆண்டு “பட்டம் போலே” என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் மாளவிகா மோகனன். பிரபல ஒளிப்பதிவாளர் கே.யூ.மோகனனின் மகளான இவர், தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “பேட்ட” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
சூப்பர்ஸ்டார் ரஜினி படத்தில் அறிமுகமான இவர், அடுத்து விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் “மாஸ்டர்” திரைப்படத்தில் தற்போது நடித்துள்ளார்.
இணையதளம் முழுவதும் மாளவிகா மோகனனுக்கென்று தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. மலையாள மொழிப்படத்தில் அறிமுகமான இவர் கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் தற்போது நடித்துள்ளார்.
இவர் தனுஷ் பிறந்த நாளையொட்டி அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வெளியிட்ட பதிவில் தனுஷுடன் நடிப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். இந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தனுஷ்.கே.ராஜா சார். உங்களுடன் பணிபுரிய ஆவலுடன் இருக்கிறேன் (நாம் இருவரும் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு விரைவில் வரும் என்று நம்புகிறேன்)” என்றிருக்கிறார்.
Wishing you a very Happy Birthday and an amazing year ahead @dhanushkraja sir! 🥳 Super excited to work with you!(hopefully someone will cast us together in a film soon😋)
தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் மாளவிகா மோகனனுடன் இந்த படத்தில் விஜய்சேதுபதியும் நடித்துள்ளார். அனிருத் ரவிச்சந்திர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப்படத்தில் இவர்களுடன் ஆண்ட்ரியா ஜெரெமையா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், சஞ்சீவ் கௌரி கிஷன், விஜே.ரம்யா ஆகியோரும் நடித்துள்ளார்கள்.