“சூப்பர் ஸ்டாருடன் டூயட் பாட வேண்டும்”… பட வாய்ப்புக்காக இளம் ஹீரோயின் எடுத்த கவர்ச்சி ரூட்!

  • March 19, 2021 / 08:03 PM IST

பிரபல ஒளிப்பதிவாளரின் மகள் தான் அந்த இளம் நடிகை. இதுவரை இவர் நடித்து தமிழில் இரண்டு படங்கள் தான் ரிலீஸாகி இருக்கிறது. ஆனால், அதற்குள் இவருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது. இதற்கு காரணம் இவர் நடித்திருக்கும் இரண்டு படங்களுமே முன்னணி ஹீரோக்களின் படங்கள். இதில் ஒரு படம் இந்த ஆண்டு தான் வெளியானது.

ஏற்கனவே, இந்த நடிகை மலையாளத்தில் மூன்று படங்களிலும், கன்னடம் மற்றும் ஹிந்தியில் ஒரு படமும் நடித்துள்ளார். இப்போது இவர் நடிப்பில் தமிழில் ஒரு படம், ஹிந்தியில் ஒரு படம் என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் தமிழில் நடிக்கும் படத்தை துருவ இயக்குநர் இயக்க, டாப் ஸ்டாரின் மருமகன் தான் ஹீரோவாக நடிக்கிறாராம். இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அடுத்ததாக தெலுங்கு சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடிக்க ஆசைப்படுகிறாராம் அந்த நடிகை. ஆகையால், அந்த சூப்பர் ஸ்டார் செல்லும் விழாக்களுக்கு எல்லாம் இந்த நடிகையும் கவர்ச்சியான காஸ்டியூமில் சென்று, அவரை கவர நினைக்கிறாராம். ஆனால், அந்த சூப்பர் ஸ்டாரோ நடிகை விரித்த வலையில் விழாமல் எஸ்கேப் ஆகி கொண்டிருக்கிறாராம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus