நடிகை மீனாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் வீடியோ!

  • September 16, 2022 / 05:40 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் மீனா. குழந்தை நட்சத்திரமாக மீனா அறிமுகமான தமிழ் படம் ‘நெஞ்சங்கள்’. அதன் பிறகு பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனாவை ‘நவயுகம்’ என்ற தெலுங்கு படத்தில் ஹீரோயினாக அவதாரம் எடுக்க வைத்து அழகு பார்த்தது திரையுலகம்.

தமிழில் ‘என் ராசாவின் மனசிலே’வில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்தார். இந்த படத்துக்கு பிறகு மீனாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘எஜமான், சேதுபதி IPS, வீரா, ராஜகுமாரன், நாட்டாமை, முத்து, அவ்வை சண்முகி, ரிதம், சிட்டிசன், அண்ணாத்த’ என படங்கள் குவிந்தது.

மீனா தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்கள் மட்டுமின்றி ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். 2009-ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் மீனா. இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். இவர் ‘தெறி’ என்ற சூப்பர் ஹிட் படத்தில் விஜய்யின் மகளாக நடித்திருந்தார்.

சமீபத்தில், மீனாவின் கணவர் வித்யாசாகர் காலமானார். இந்நிலையில், இன்று (செப்டம்பர் 16-ஆம் தேதி) நடிகை மீனாவின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தற்போது, மீனாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுத்த வீடியோ மற்றும் ஸ்டில்ஸ் வெளியாகியுள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.