நடிகை மீராமிதுன் இறந்துவிட்டதாக பரவிவரும் தகவல்?!

  • September 12, 2020 / 09:09 PM IST

சமீபகாலமாக இணையதளம் முழுவதும் பரபரப்பாக பிரபலங்களை பற்றி பேசி நெகடிவ் கமெண்ட் மூலம் அனைவரிடமும் பரிட்சயமான மீராமிதுன் தற்போது இறந்து விட்டதாக ஒரு செய்தி பரவி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவருக்கும் பரிட்சயமான மீராமிதுன் சமீபத்தில் நடிகர் கமல், விஜய், சூர்யா போன்ற முன்னணி நட்சத்திர நடிகர்களை வம்பிழுத்து அவர்களை பற்றி அவதூறு பேசி அவர்கள் குடும்பத்தை பற்றி நெகட்டிவ் கமெண்ட் பரப்பி இணையதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டார்.

இவரது இந்த செயலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து இவரை திட்டியும் வந்தார்கள். இந்நிலையில் தற்போது மீராமிதுன் ட்விட்டர் கணக்கில் அவர் இறந்து விட்டதாகவும் போஸ்ட்மார்ட்டம் நடைபெற்று வருவதாகவும் ஒரு பதிவு வந்துள்ளது.

இவர் உண்மையிலேயே இறந்துவிட்டாரா இல்லை இவரது டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்று தற்போது தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். இந்நிலையில் இதுபற்றி மீராமிதுன் தாய் தன் மகளை காணவில்லை என்றும் அவளுக்கு எதுவும் நடந்திருக்காது என்றும் கதறி அழுதுள்ளார்.

மீராமிதுன் என்ன ஆனார் அவர் இறந்து விட்டாரா இல்லை அவரது அக்கௌன்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

https://twitter.com/meera_mitun/status/1304401537943269376?s=19

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus