பாத் டப்பில் செம்ம செக்ஸி போஸ் கொடுத்த மெஹ்ரீன்… திக்குமுக்காடும் ரசிகர்கள்!

  • June 21, 2021 / 10:59 AM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் மெஹ்ரீன் பிர்சடா. இவர் அறிமுகமான முதல் தெலுங்கு படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘கிருஷ்ணா காடி வீர பிரேம காதா’. இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கிய இந்த படத்தில் ஹீரோவாக நானி நடித்திருந்தார்.

‘கிருஷ்ணா காடி வீர பிரேம காதா’ படத்துக்கு பிறகு நடிகை மெஹ்ரீனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘மகானுபவுடு, ராஜா தி கிரேட், ஜவான், பந்தம், கவச்சம், F2 : Fun and Frustration, சாணக்யா, என்த மஞ்சிவாடவுரா, அஷ்வதாமா’ என தெலுங்கு படங்கள் குவிந்தது. ‘நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா, பட்டாஸ்’ போன்ற படங்களில் மெஹ்ரீனை நடிக்க வைத்து தமிழ் சினிமாவும் அழகு பார்த்தது.

மெஹ்ரீன் தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் பஞ்சாபி, ஹிந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது ‘F3’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார் மெஹ்ரீன். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஹாட்டான போட்டோஷூட் ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus