சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் மிருணாளினி ரவி. இவர் தமிழில் அறிமுகமான முதல் படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இந்த படத்தை இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கியிருந்தார்.
‘சூப்பர் டீலக்ஸ்’-க்கு பிறகு மிருணாளினி ரவிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘சாம்பியன், எனிமி, எம்ஜிஆர் மகன், ஜாங்கோ, கோப்ரா’ என தமிழ் படங்கள் குவிந்தது.
மிருணாளினி ரவி தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது இவர் கைவசம் ஒரு தெலுங்கு படம் மட்டும் இருக்கிறது.
இந்நிலையில், நேற்று (மே 10-ஆம் தேதி) மிருணாளினி ரவியின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். தற்போது, இவரின்
பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் மற்றும் வீடியோ வெளியாகியுள்ளது.