தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த நடிகைகளில் ஒருவரான நடிகை நதியா இன்று வரை இளமை மாறாமல் மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார்.
இவருக்கென்று தனி பாணி வைத்து நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தவர் இவர். 1985 ஆம் வருடம் வெளியான “பூவே பூச்சூடவா” திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து தமிழ் தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்து வந்தார்.
1988 ஆம் வருடம் திருமணம் செய்துகொண்ட இவர் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். அதிலிருந்து சினிமாவிலிருந்து விலகி இருந்தவர் 2004 ஆம் ஆண்டு வெளியான ‘எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி” யில் ஜெயம் ரவியின் தாய் வேடத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தில் கொஞ்சம் கூட இளமை குறையாமல் இவர் இருந்ததை அனைவரும் பாராட்டி இருந்தார்கள். தற்போது தனது பழைய கேலண்டர் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு மறக்க முடியாத அனுபவம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Stumbled upon my first calendar shoot from 1986 📸📆 #ThrowbackThursday pic.twitter.com/w8VY5iBb1b
— Actress Nadiya (@ActressNadiya) December 3, 2020