வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் நதியா… வைரலாகும் வீடியோ!

மலையாளத்தில் 1984-ஆம் ஆண்டு வெளியான படம் ‘நோக்கேததூரத்து கண்ணும் நாட்டு’. இந்த படத்தில் ஹீரோவாக மோகன் லால் நடித்திருந்தார். இதனை ஃபாசில் இயக்கியிருந்தார். இதில் ஹீரோயினாக நதியா நடித்திருந்தார். இது தான் நதியா அறிமுகமான முதல் படமாம். இதனையடுத்து சில மலையாள படங்களில் நடித்த நதியா, அடுத்ததாக தமிழ் திரையுலகில் என்ட்ரியாக ஆசைப்பட்டார்.

அதன்படி 1985-ஆம் ஆண்டு வெளியான ‘பூவே பூச்சூடவா’ மூலம் தமிழிலும் அறிமுகமானார். இந்த படத்தையும் இயக்குநர் ஃபாசில் தான் இயக்கியிருந்தார். ‘பூவே பூச்சூடவா’ படத்துக்கு பிறகு ‘பூக்களை பறிக்காதீர்கள், மந்திர புன்னகை, உயிரே உனக்காக, உனக்காகவே வாழ்கிறேன், நிலவே மலரே, சின்ன தம்பி பெரிய தம்பி, அன்புள்ள அப்பா, ராஜாதி ராஜா’ போன்ற பல தமிழ் படங்களில் நடித்தார் நதியா.

1988-ஆம் ஆண்டு ஷிரிஷ் காட்போலே என்பவரை திருமணம் செய்து கொண்டார் நதியா. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். சில ஆண்டுகள் படங்களில் நடிக்க ப்ரேக் விட்ட நதியா, 2004-யில் வெளியான ‘M.குமரன் S/0 மகாலக்ஷ்மி’ படம் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

அதன் பிறகு ‘தாமிரபரணி, சண்டை, பட்டாளம்’ போன்ற தமிழ் படங்களில் நடித்தார். இவர் மலையாளம், தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மொழி படங்களிலும் வலம் வந்திருக்கிறார். இப்போது, நதியா நடிப்பில் மலையாளத்தில் இரண்டு படங்களும், தெலுங்கில் மூன்று படங்களும் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இவ்வீடியோ ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

 

View this post on Instagram

 

A post shared by Nadiya Moidu (@simply.nadiya)

Share.