சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நமீதா. இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘எங்கள் அண்ணா’. இதில் ஹீரோவாக விஜயகாந்த் நடிக்க, படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சித்திக் இயக்கியிருந்தார். ‘எங்கள் அண்ணா’ படத்திற்கு பிறகு நடிகை நமீதாவிற்கு அடித்தது ஜாக்பாட்.
அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘மகா நடிகன், ஏய், இங்கிலீஷ்காரன், சாணக்யா, பம்பரக்கண்ணாலே, ஆணை, கோவை பிரதர்ஸ், பச்சக் குதிர, தகப்பன்சாமி, நீ வேணுன்டா செல்லம், வியாபாரி, நான் அவன் இல்லை, அழகிய தமிழ்மகன், பில்லா, சண்டை, பாண்டி, பெருமாள், தீ, 1977, இந்திர விழா, ஜகன் மோகினி, அழகான பொண்ணுதான், இளைஞன், இளமை ஊஞ்சல், பொட்டு’ என படங்கள் குவிந்தது.
மேலும், ‘பிக் பாஸ்’ எனும் ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டு ரசிகர்களின் லைக்ஸை குவித்தார். நமீதா தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.
2017-ஆம் ஆண்டு வீரேந்திர சவுத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நமீதா. கடந்த ஆண்டு (2022) வீரேந்திர சவுத்ரி – நமீதா தம்பதியினருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது. இந்நிலையில், கடந்த மே 10-ஆம் தேதி நடிகை நமீதாவுக்கு பிறந்தநாள் என்பதால் ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். தற்போது, இவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.