பிரபல நடிகை நந்திதா ஸ்வேதா வீட்டில் ஏற்பட்ட திடீர் மரணம்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நந்திதா ஸ்வேதா. இவருக்கு தமிழ் மொழியில் அமைந்த முதல் படமே மெகா ஹிட்டானது. அது தான் ‘அட்டகத்தி’. தினேஷ் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பா.இரஞ்சித் இயக்கியிருந்தார்.

‘அட்டகத்தி’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகை நந்திதா ஸ்வேதாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘எதிர் நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, நளனும் நந்தினியும், ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி, புலி, உப்பு கருவாடு, அஞ்சல, உள்குத்து, அசுரவதம், தேவி 2, 7, டாணா, ஈஸ்வரன், கபடதாரி, நெஞ்சம் மறப்பதில்லை’ என தமிழ் படங்கள் குவிந்தது.

நடிகை நந்திதா ஸ்வேதா தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இவர் நடித்துள்ள புதிய படமான ‘IPC 376’ மிக விரைவில் ரிலீஸாகவுள்ளது. தற்போது, நடிகை நந்திதாவின் தந்தை இயற்கை எய்தினார் என தகவல் கிடைத்துள்ளது.

Share.