‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது, திரையரங்குகளும் மூடப்பட்டது. சமீபத்தில், 75 நபர்களை மட்டும் வைத்து சில நிபந்தனைகளுடன் ஷூட்டிங் எடுக்க அரசாங்கம் அனுமதி கொடுத்து விட்டது. கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் சில படங்களின் ஷூட்டிங் துவங்கியுள்ளது. அடுத்தடுத்து பல படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து செம பிஸியாக நடித்து வந்தார்கள் ஹீரோயின்ஸ்.
ஆனால், கடந்த சில மாதங்களாக லாக் டவுன் டைமில் தான் நடிகைகளுக்கு அதிக நேரம் கிடைத்திருந்தது. ஆகையால், அவரவர்கள் தங்களுக்கு பிடித்தமான விஷயத்தில் கவனம் செலுத்தி லாக் டவுனை பயனுள்ளதாக மாற்றினார்கள். சிலர், இதுவரை தெரியாத பல புதிய விஷயங்களையும் கற்றுக் கொண்டார்கள். ‘அட்டகத்தி’ என்ற தமிழ் படம் மூலம் ஃபேமஸான நடிகை நந்திதா ஸ்வேதா.
அதன் பிறகு ‘எதிர் நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, உப்பு கருவாடு, உள்குத்து’ போன்ற தமிழ் படங்களில் நடித்திருந்தார். இப்போது நந்திதா ஸ்வேதா நடிப்பில் நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த போட்டோஷூட் ஸ்டில்ஸை பார்த்த ரசிகர்கள், நந்திதாவா இது என ஆச்சர்யப்படுகின்றனர். அந்த அளவுக்கு செம ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கிறார் நந்திதா.