தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள். இப்போது ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் தமிழில் ‘கனெக்ட்’, மலையாளத்தில் ‘கோல்டு’, ஹிந்தியில் ‘ஜவான்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
சமீபத்தில், நயன்தாராவின் 75-வது படம் (தமிழ்) குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கவுள்ளாராம். இவர் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்றவராம்.
இந்த ஆண்டு (2022) ஜூன் 9-ஆம் தேதி நடிகை நயன்தாரா பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே, பிரபல OTT நிறுவனமான ‘நெட்ஃப்ளிக்ஸ்’ இவர்களின் திருமண நிகழ்ச்சியின் ஒளிபரப்பு உரிமையை ரூ.25 கோடிக்கு வாங்கியிருந்தது.
சமீபத்தில், ‘நெட்ஃப்ளிக்ஸ்’ நிறுவனம் மிக விரைவில் இவர்களின் திருமண நிகழ்ச்சியை ஒளிபரப்பும் தேதி அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்டு ஒரு டீசரையும் வெளியிட்டிருந்தது. தற்போது, விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதியினருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்து உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை விக்னேஷ் சிவனே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததுடன், சில ஸ்டில்ஸையும் வெளியிட்டுள்ளார்.
Nayan & Me have become Amma & Appa❤️
We are blessed with
twin baby Boys❤️❤️
All Our prayers,our ancestors’ blessings combined wit all the good manifestations made, have come 2gethr in the form Of 2 blessed babies for us❤️😇
Need all ur blessings for our
Uyir😇❤️& Ulagam😇❤️ pic.twitter.com/G3NWvVTwo9— Vignesh Shivan (@VigneshShivN) October 9, 2022