வைரலாகும் நடிகை நயன்தாரா – இயக்குநர் விக்னேஷ் சிவனின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

  • October 10, 2023 / 11:27 AM IST

தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள்.

‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் தமிழில் ‘மண்ணாங்கட்டி’, இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா படம், ஹிந்தியில் ‘ஜவான்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘ஜவான்’ படம் கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி ரிலீஸானது.

கடந்த ஆண்டு (2022) ஜூன் 9-ஆம் தேதி நடிகை நயன்தாரா பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். பின், விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதியினருக்கு வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது.

சமீபத்தில், நடிகை நயன்தாரா ‘9ஸ்கின்’ என்ற பெயரில் ஸ்கின் கேர் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனத்தை துவங்கினார். தற்போது, விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவுடன் இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Read Today's Latest Gallery Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus