திருமணத்திற்கு பிறகு ஏற்பட்ட மாற்றம்!

நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஆகியோரின் திருமணம் ஜுன் 9 ம் தேதி மகாபலிபுரத்தில் நடைபெற்றது.திருமணத்திற்கு முன்பாக பத்திரிக்கையாளர்களை அழைத்து, அதிகாரப்பூர்வமாக திருமணம் பற்றிய தகவலை விக்னேஷ் சிவன் அறிவித்து இருந்தார்.


அதன் பிறகு ஜுன் 11 ம் தேதி மதியம் நயன்தாராவுடன் சேர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் விக்னேஷ் சிவன். தொடர்ந்து தங்களது திரை வாழ்விற்கு ஆதரவு கேட்டனர். தற்போது இந்த புது ஜோடி கேரளாவிற்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் திருமணத்துக்கு பிறகு புதிய படங்களில் நடிக்க இயக்குனர்களுக்கு சில நிபந்தனைகள் விதிக்க நயன்தாரா முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கதாநாயகனுடன் நெருக்கமான காதல் காட்சிகளில் நடிப்பது இல்லை என்றும், நடிகர்கள் தன்னை தொட்டு நடிக்கக்கூடாது என்றும் நிபந்தனை விதிக்க இருக்கிறாராம். சமீபத்தில் ஷாருக்கான் ஜோடியாக நடித்த ஜவான் இந்தி படத்திலும் காதல் காட்சிகளில் இருவரும் நெருங்காமல் தள்ளி நின்றே நடித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க முன்னுரிமை அளிக்கவும் முடிவு செய்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Share.