லேடி சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள்… வாழ்த்திய ரசிகர்கள்!

  • November 18, 2020 / 09:04 PM IST

தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள். ஆரம்பத்தில் சில மலையாள படங்களில் நடித்திருந்தாலும், தமிழில் அறிமுகமான முதல் படமே நயன்தாராவுக்கு சூப்பர் ஹிட்டாக அமைந்தது. அந்த படம் தான் ‘ஐயா’. இயக்குநர் ஹரி இயக்கியிருந்த இந்த படத்தில் கதையின் நாயகனாக சரத்குமார் நடித்திருந்தார்.

அதன் பிறகு இரண்டாவது படமான ‘சந்திரமுகி’-யில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்தார் நயன்தாரா. ‘சந்திரமுகி’ படத்தின் வெற்றிக்கு பிறகு நயன்தாராவிற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து அவரின் கால்ஷீட் டைரியில் ‘கஜினி, வல்லவன், பில்லா, யாரடி நீ மோகினி, ஆதவன், பாஸ் (எ) பாஸ்கரன், தனி ஒருவன், நானும் ரௌடி தான், மூக்குத்தி அம்மன்’ என படங்கள் குவிந்தது. இப்போது ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் தமிழில் ‘நெற்றிக்கண், அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல்’ மற்றும் மலையாளத்தில் ‘நிழல்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ மற்றும் ‘நெற்றிக்கண்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் நயன்தாராவுக்கு ரொம்பவும் ஸ்பெஷல். ஏனெனில், ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தை நயன்தாராவின் காதலரும், பிரபல இயக்குநருமான விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கிறார். மேலும், ‘நெற்றிக்கண்’ படத்தை விக்னேஷ் சிவன் தயாரிக்க, மிலிந்த் ராவ் இயக்கி வருகிறார். இந்நிலையில், இன்று (நவம்பர் 18-ஆம் தேதி) நடிகை நயன்தாராவின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

31

32

33

34

35

36

37

38

39

40

41

42

43

44

45

46

47

48

49

50

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus