தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து, தற்போது “லேடி சூப்பர் ஸ்டார்” உயரத்திலிருக்கும் நடிகை நயன்தாரா மாதிரியே இருக்கும் ஒரு பெண்ணின் புகைப்படம் தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
2005ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான “ஐயா” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான நடிகை நயன்தாரா, தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து இன்று லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருகிறார்.
கஜினி, வல்லவன், ராஜா ராணி, ஆரம்பம், மாயா, தனி ஒருவன், நானும் ரவுடிதான், இருமுகன், டோரா, அறம் கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் என்று இவரது நடிப்பில் வெளிவந்த அனைத்து படங்களுமே வெற்றிப் படங்களாக அமைந்தது.
தமிழில் ரஜினி, அஜித், விஜய், விக்ரம், பிரபுதேவா, சிம்பு, விஜய் சேதுபதி, ஜெயம்ரவி போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் இவர் நடித்துள்ளார்.
தமிழ்சினிமாவில் நடிகைக்கான தனி கதையைக் கருவாகக் கொண்டு எடுக்கப்பட்ட படங்களில் நடிகை நயன்தாரா தன் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தைப் பெற்றார்.
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப் படங்களில் நடித்திருக்கிறார். தற்போது திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கும் இவரைப் போலவே இருக்கும் விசா ஸ்ரீ என்னும் டப்பிங் ஆர்டிஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/p/CCuqqdKF6IS/?igshid=jdn1ke18fdo1
இவர் திரைப்படங்களில் வரும் நயன்தாராவின் மேக்கப் போட்டு அவரைப்போலவே புகைப்படங்களை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நயன்தாராவைப் போலவே அச்சு அசலாக புகைப்படங்களில் இருக்கும் இவரின் புகைப்படத்தை அவரது ரசிகர்கள் ஆச்சரியமாக வைரலாக்கி வருகிறார்கள்.
https://www.instagram.com/p/CCs-IPhl7IY/?igshid=1b1mode1azgmj
https://www.instagram.com/p/CCaN8Q-lv1J/?igshid=158ojtd0h74xh
https://www.instagram.com/p/CCfLCSLlEBJ/?igshid=ad99ub9zlkds