பிரபல நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா உறுதி… அவரே வெளியிட்ட தகவல்!

  • August 13, 2020 / 07:40 PM IST

தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நிக்கி கல்ராணி. இவர் தமிழில் நடித்த முதல் படமே ஹாரர் ஜானர். அது தான் ‘டார்லிங்’. இந்த படத்தில் கதையின் நாயகனாக ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்திருந்தார். இப்படம் சூப்பர் ஹிட்டானதும், நிக்கி கல்ராணிக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘யாகாவாராயினும் நா காக்க, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மொட்ட சிவா கெட்ட சிவா’ என படங்கள் குவிந்தது. தற்போது, நிக்கி கல்ராணி நடித்து ரிலீஸுக்கு தயாராக உள்ள படம் ‘ராஜவம்சம்’. இந்நிலையில், இன்று நடிகை நிக்கி கல்ராணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார்.

அந்த பதிவில் “கடந்த வாரம் எனக்கு லேசான அளவில் ‘கொரோனா’ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு நான் வீட்டிலையே தனிமைப் படுத்திக் கொண்டு, உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறேன். இப்போது நான் நலமாக உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

https://twitter.com/nikkigalrani/status/1293883416031531008

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus