நிவேதா தாமஸின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் கியூட் ஸ்டில்!

  • November 3, 2020 / 09:52 PM IST

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நிவேதா தாமஸ். நிவேதா தாமஸ் அறிமுகமான முதல் படத்திலேயே டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய்-க்கு தங்கச்சியாக நடித்திருந்தார். அந்த படம் தான் ‘குருவி’. அதன் பிறகு நடிகை நிவேதா தாமஸுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘போராளி, நவீன சரஸ்வதி சபதம், ஜில்லா, பாபநாசம், தர்பார்’ என படங்கள் குவிந்தது. இதில் ‘பாபநாசம்’ மற்றும் ‘தர்பார்’ ஆகிய இரண்டு படங்களிலும் சூப்பராக நடித்து ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்தார் நிவேதா தாமஸ். நிவேதா தாமஸ் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

இப்போது நிவேதா தாமஸ் நடிப்பில் மூன்று தெலுங்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், நேற்று (நவம்பர் 2-ஆம் தேதி) நடிகை நிவேதா தாமஸின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். தற்போது, பர்த்டே கேக் வெட்டும்  போது எடுத்த கியூட்டான ஸ்டில்லை நிவேதா தாமஸ் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus