நடிகை ஓவியா வெளியிட்டுள்ள ரஜினிகாந்தின் ஸ்பெஷல் போஸ்டர்!

  • August 17, 2020 / 09:40 AM IST

தற்போது இணையதளம் முழுவதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 45 ஆண்டுகளை நிறைவு செய்ததை அடுத்து அவரை வாழ்த்தி வெளியான பதிவுகளும் போஸ்டர்களும் தான் வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்த் ரசிகர்கள் காமன் டிபி ஒன்றை வெளியிட்டு அதை இணையதளத்தில் வைரலாக்கி வருகிறார்கள். இந்த காமன் டிபியை பல சினிமா பிரபலங்கள் வெளியிட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.

மேலும் பல சினிமா பிரபலங்கள் தங்களுக்கு ரஜினிகாந்துடனான சினிமா அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டு அவரை பாராட்டி பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள். மேலும் ரஜினிகாந்த்தை பார்த்து சினிமாவில் வியந்து நடிக்க வந்த பலரும் தங்கள் அனுபவம் குறித்தும் வெளியிட்டு வருகிறார்கள்.

இவ்வாறு பலரும் ரஜினிகாந்தின் 45 வருட சினிமா பயணம் நிறைவை கொண்டாடி வரும் நிலையில் நடிகை ஓவியா தற்போது ரஜினிகாந்தின் ஸ்பெஷல் ட்ரிபியூட் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த போஸ்டரில் 45 ஆண்டுகளாக நடித்த கதாபாத்திரத்தில் இருந்து 45 படங்களை எடுத்து ஒரே போஸ்டரில் வைத்து ஸ்பெஷலாக உருவாக்கியுள்ளார்கள். தற்போது ரஜினி ரசிகர்கள் இதை உற்சாகத்துடன் வைரலாக்கி வருகிறார்கள்.

https://twitter.com/OviyaaSweetz/status/1294610074254508032

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus