பிரபல பாலிவுட் நடிகை பரிணீதி சோப்ரா – ராகவ் சதாவின் திருமண வீடியோ!

  • September 30, 2023 / 11:03 AM IST

பாலிவுட் சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் பரிணீதி சோப்ரா. இவர் ஹீரோயினாக அறிமுகமான முதல் படம் ‘லேடிஸ் Vs ரிக்கி பாஹ்ல்’. இந்த படத்தை இயக்குநர் மனீஷ் ஷர்மா இயக்கியிருந்தார்.

இந்த படத்துக்கு பிறகு நடிகை பரிணீதி சோப்ராவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘சுத் தேசி ரொமான்ஸ், ஹஸி தோ பஸி, தாவத் ஈ இஷ்க், கில் தில், மேரி பியாரி பிந்து, கோல்மால் அகைன், நமஸ்தே இங்கிலாந்து, கேசரி, தி கேர்ள் ஆன் தி ட்ரெயின்’ என ஹிந்தி படங்கள் குவிந்தது.

இப்போது இவர் நடிப்பில் இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதி உதய்பூரில் ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி.ராகவ் சதாவை நடிகை பரிணீதி சோப்ரா திருமணம் செய்து கொண்டார். தற்போது, இவர்களின் திருமண வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Read Today's Latest Videos Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus