தமிழில் 2017 ஆம் ஆண்டு நடிகர் அஜித் நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான “என்னை அறிந்தால்” திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர்.
தமிழ் திரையுலகில் கால் பதிப்பதற்கு முன் மலையாளம் மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்து வந்தார். என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசனின் “உத்தம வில்லன்’ திரைப்படத்தில் ஒரு குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதை தொடர்ந்து இவர் கோடிட்ட இடங்களை நிரப்புக, என்கிட்ட மோதாதே, நிமிர், வெள்ள ராஜா, சீதக்காதி ஆகிய திரைப்படங்களில் நடித்து தமிழ்த் திரைப்பட உலகில் தனக்கென தனி இடத்தை தற்போது தக்க வைத்துள்ளார்.
தற்போது “ஆலம்பனா” என்ற படத்தில் நடித்து வரும் பார்வதி நாயர் இந்த லாக்டவுனில் விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். தற்போது இவர் 1 மில்லியன் பாலோவர்ஸ் பெற்றதை உற்சாகமாக வெளியிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/CGP2-mFA2Ef/?utm_source=ig_web_copy_link
https://www.instagram.com/p/CGRMhoilHDT/?igshid=4nn8hyk95p0h
https://www.instagram.com/p/CGSDp2zDoA3/?igshid=ddk3k2wny8ir
https://www.instagram.com/p/CGOnsTrlY3w/?igshid=lrnva6z2rk4f