சொகுசு காரில் அனுமதியின்றி காதலருடன் வந்த பிரபல நடிகை கைது செய்யப்பட்டுள்ளார்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக மே 17ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் பூனம் பாண்டே மற்றும் அவரது காதலர் இருவரும், எந்த ஒரு காரணமும் இன்றி சொகுசு காரில் மும்பை நகரில் உள்ள மெரைன் டிரைவில் வலம் வந்துள்ளனர்.
இவர்களைத் தடுத்து நிறுத்தி விசாரித்து வந்த காவல் துறையினர், அவர்கள் உபயோகித்த விலை உயர்ந்த பிஎம்டபள்யூ கார், பூனம் பாண்டே மற்றும் அவரது காதலரைக் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சட்டத்தை மதிக்காதது, கொரோனா தொற்று பரவ காரணமாக இருந்தது போன்று பலவேறு பிரிவுகளில் பூனம் பாண்டே மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இவர் யார் என்று தெரியாதவர்களுக்கு கிரிக்கெட் போட்டி ஒன்றில் இந்தியா வென்றால் நிர்வாணமாகக் காட்சியளிப்பேன் என்று சர்ச்சையை ஏற்படுத்தியவர் தான் இந்த பூனம் பாண்டே.