கர்ப்பமாக இருக்கும் பூர்ணா… வைரலாகும் புதிய போட்டோஷூட் ஸ்டில்ஸ்!

  • February 17, 2023 / 06:28 PM IST

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பூர்ணா. இவருக்கு தமிழில் முதல் படமே பரத்துடன் தான் அமைந்தது. அந்த படம் ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’. இந்த படத்தை இயக்குநர் திருமுருகன் இயக்கியிருந்தார்.

இப்படத்திற்கு பிறகு நடிகை பூர்ணாவிற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘கந்தகோட்டை, துரோகி, ஆடு புலி, வேலூர் மாவட்டம், வித்தகன், ஜன்னல் ஓரம், தகராறு, மணல் கயிறு 2, கொடிவீரன், சவரக்கத்தி, இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு, அடங்க மறு, காப்பான், லாக்கப், தலைவி, விசித்திரன்’ என படங்கள் குவிந்தது.

இப்போது பூர்ணா நடிப்பில் ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. சமீபத்தில், பூர்ணா சாணித் ஆசிஃப் அலி என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது, பூர்ணா கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில், பூர்ணாவின் புதிய போட்டோஷூட் ஸ்டில்ஸ் வெளியாகியுள்ளது. இந்த ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

Read Today's Latest Gallery Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus