சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பூர்ணா. இவருக்கு தமிழில் முதல் படமே பரத்துடன் தான் அமைந்தது. அந்த படம் ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’. இந்த படத்தை இயக்குநர் திருமுருகன் இயக்கியிருந்தார்.
இப்படத்திற்கு பிறகு நடிகை பூர்ணாவிற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘கந்தகோட்டை, துரோகி, ஆடு புலி, வேலூர் மாவட்டம், வித்தகன், ஜன்னல் ஓரம், தகராறு, மணல் கயிறு 2, கொடிவீரன், சவரக்கத்தி, இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு, அடங்க மறு, காப்பான், லாக்கப், தலைவி, விசித்திரன்’ என படங்கள் குவிந்தது.
கடந்த ஆண்டு (2022) பூர்ணா சாணித் ஆசிஃப் அலி என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில், சாணித் ஆசிஃப் அலி – பூர்ணா தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு ‘Hamdan’ என பெயர் சூட்டப்பட்டிருக்கிறதாம். இதுவரை யாரும் பார்த்திராத நடிகை பூர்ணாவின் அரிய புகைப்பட தொகுப்பு இதோ…