சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பூர்ணா. இவருக்கு தமிழில் முதல் படமே பரத்துடன் தான் அமைந்தது. அந்த படம் ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’. இந்த படத்தை இயக்குநர் திருமுருகன் இயக்கியிருந்தார்.
இப்படத்திற்கு பிறகு நடிகை பூர்ணாவிற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘கந்தகோட்டை, துரோகி, ஆடு புலி, வேலூர் மாவட்டம், வித்தகன், ஜன்னல் ஓரம், தகராறு, மணல் கயிறு 2, கொடிவீரன், சவரக்கத்தி, இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு, அடங்க மறு, காப்பான், லாக்கப், தலைவி, விசித்திரன்’ என படங்கள் குவிந்தது.
இப்போது பூர்ணா நடிப்பில் ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், பூர்ணா சாணித் ஆசிஃப் அலி என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை பூர்ணாவே இன்ஸ்டாகிராமில் தெரிவித்ததுடன், திருமண புகைப்படங்களையும் வெளியிட்டிருக்கிறார்.