சினிமாவில் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருபவர் ப்ரியா பவானி ஷங்கர். செய்தி வாசிப்பாளர், ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியல் நடிகை என வலம் வந்தவரை ஹீரோயினாக அவதாரம் எடுக்க வைத்து அழகு பார்த்தது தமிழ் சினிமா. அது தான் ‘மேயாத மான்’. ‘மேயாத மான்’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகை ப்ரியா பவானி ஷங்கருக்கு அடித்தது ஜாக்பாட்.
கார்த்தியின் ‘கடைக்குட்டி சிங்கம்’, எஸ்.ஜே.சூர்யாவின் ‘மான்ஸ்டர்’, அருண் விஜய்யின் ‘மாஃபியா : அத்தியாயம் ஒன்று’, அருள்நிதியின் ‘களத்தில் சந்திப்போம்’ என நான்கு படங்களிலும், பரத்தின் ‘டைம் என்ன பாஸ்’ வெப் சீரிஸிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்.
இப்போது நடிகை ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் அதர்வாவின் ‘குருதி ஆட்டம்’, ஹரிஷ் கல்யாணின் ‘ஓ மணப்பெண்ணே’, எஸ்.ஜே.சூர்யாவின் ‘பொம்மை’, சிலம்பரசனின் ‘பத்து தல’, இயக்குநர் சிம்பு தேவனின் ‘கசட தபற’, துல்கர் சல்மானின் ‘வான்’, கமல் ஹாசனின் ‘இந்தியன் 2’, ராகவா லாரன்ஸின் ‘ருத்ரன்’, அசோக் செல்வனின் ‘ஹாஸ்டல்’, அருண் விஜய் – இயக்குநர் ஹரி காம்போவில் உருவாகும் படம் என பத்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசத்தலான புதிய போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த போட்டோஷூட் ஸ்டில்ஸ் ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறது.