சொக்க வைக்கும் பேரழகில் நடிகை ப்ரியாமணி… குவியும் லைக்ஸ்!
October 19, 2022 / 01:19 PM IST
|Follow Us
சினிமாவில் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருபவர் ப்ரியாமணி. இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா இயக்கத்தில் தான். அது தான் ‘கண்களால் கைது செய்’. இந்த படத்துக்கு பிறகு நடிகை ப்ரியாமணிக்கு அடித்தது ஜாக்பாட்.
அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘அது ஒரு கனாக்காலம், மது, பருத்திவீரன், மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும், ராவணன், சாருலதா’ என படங்கள் குவிந்தது. ப்ரியாமணி தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி கன்னடம், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.
2017-ஆம் ஆண்டு முஸ்தஃபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ப்ரியாமணி. இப்போது ப்ரியாமணி நடிப்பில் ‘மைதான், ஜவான், கொட்டேஷன் கேங், சயனைடு, Dr.56’ மற்றும் நடிகர் நாகசைத்தன்யா படம் என ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இந்நிலையில், இவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூப்பரான புது போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இப்புது போட்டோஷூட் ஸ்டில்ஸ் ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறது.