ரம்யா பாண்டியனின் புதிய போட்டோஷூட் !

  • July 9, 2022 / 11:10 AM IST

தமிழ் சினிமாவில் டம்மி டப்பாசு என்கிற படம் மூலம் அறிமுகமாகி இருந்தவர் நடிகை ரம்யா பாண்டியன் .
இந்த படத்திற்கு பிறகு இவர் ஜோக்கர் படத்தில் நடித்தார் . இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது . இயக்குனர் ராஜு முருகன் இந்த படத்தை இயக்கி இருந்தார் . 2016-ஆம் ஆண்டு வெளியான இந்த படம் தேசிய விருதை வென்றது .

இதன் பிறகு ஆண் தேவதை படத்தில் நடித்து இருந்தார் ரம்யா பாண்டியன் . இந்த படமும் சுமாரான வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது . இவர் படங்களில் நடித்து இருந்தாலும் போட்டோஷூட் மூலம் மிகவும் பிரபலமானார். பின்னர் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக களமிறங்கி இறுதிப்போட்டி வரை முன்னேறினார். அது வரை இளஞர்கள் மட்டும் ரசித்து வந்த ரம்யா பாண்டியனை குடும்பங்களும் ரசித்தனர் . ரம்யா பாண்டியன் இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்த இப்படத்தில் ரம்யா பாண்டியனின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

ரம்யா பாண்டியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் லைக்சை அள்ளுவார் . அந்த வகையில் தற்போது பச்சை நிற கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படத்தை அவர் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி ஏராளமான லைக்குகளை குவித்து வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus