நடிகை ரீமா சென்னின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் வீடியோ!
October 29, 2022 / 02:07 PM IST
|Follow Us
சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்தவர் ரீமா சென். இவருக்கு தமிழ் மொழியில் அமைந்த முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘மின்னலே’. இதில் மாதவன் ஹீரோவாக நடிக்க, இதனை டாப் இயக்குநர்களில் ஒருவரான கெளதம் மேனன் இயக்கியிருந்தார்.
‘மின்னலே’ படத்துக்கு பிறகு நடிகை ரீமா சென்னுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘தளபதி’ விஜய்யின் ‘பகவதி’, ‘சீயான்’ விக்ரமின் ‘தூள்’, ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுனின் ‘கிரி’, விஷாலின் ‘செல்லமே’, சிலம்பரசன் TR-யின் ‘வல்லவன்’, கார்த்தியின் ‘ஆயிரத்தில் ஒருவன்’, தமன் குமாரின் ‘சட்டம் ஒரு இருட்டறை’ என படங்கள் குவிந்தது.
ரீமா சென் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், பெங்காலி ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். ரீமா சென் தன்னை விட 8 வயது பெரியவரான ஷிவ் கரண் சிங் என்பவரை 2012-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.
இந்நிலையில், இன்று (அக்டோபர் 29-ஆம் தேதி) ரீமா சென்னின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்த்து வருகின்றனர். தற்போது, இவரின்
பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் மற்றும் வீடியோஸ் வெளியாகியுள்ளது.
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.