சுடுகாட்டில் பிரபல ஹீரோ படத்தின் ஷூட்டிங்… நடிக்க மறுத்த பிரபல நடிகை!

பொதுவாகவே ஒரு படத்தின் ஷூட்டிங், அக்காட்சி நடைபெறும் இடத்தை போன்றே போடப்பட்ட செட்டிலோ அல்லது ரியல் லொகேஷனிலோ தான் நடைபெறும். தற்போது, ரியல் லொகேஷனில் நடைபெற்று வந்த ஒரு படத்தின் ஷூட்டிங் பிரபல நடிகையால் செட் போட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது குறித்து ஒரு தகவல் கசிந்துள்ளது.

மிரட்டலான பேய் படங்களை மறக்கடிக்க பார்ட் 1, 2, 3, 4 என அடுத்தடுத்து ஹாரர் – காமெடி ஜானரில் படத்தை கொடுத்தவர் தான் அந்த ‘லா’ நடிகர். இப்போது, இந்த நடிகரின் நடிப்பில் நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ஒரு படத்தில் இந்த ஹீரோவுக்கு அம்மாவாக சினிமாவில் திரைக்கதை மன்னன் என்று அழைக்கப்படும் இயக்குநரின் மனைவி தான் நடித்து வருகிறாராம். இவர் 1981-1985 வரை பல படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

‘லா’ நடிகரும், இந்த நடிகையும் சேர்ந்து நடிக்கும் அப்படத்தின் ஷூட்டிங் நிஜ சுடுகாட்டில் இரவு நேரம் நடந்து வந்திருக்கிறது. அப்போது ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த அந்த நடிகை, நிஜ சுடுகாட்டை பார்த்ததும் டென்ஷனாகி “நான் இங்கு நடிக்க மாட்டேன். எனக்கு பயமா இருக்கு. செட் போட்டுவிட்டு சொல்லுங்க, நான் வந்து நடிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டாராம். பின், படக்குழுவினர் சுடுகாடு செட் ஒன்று போட்டதுக்கு பிறகு அந்த நடிகை வந்து அக்காட்சியில் நடித்து கொடுத்தாராம்.

Share.