அடேங்கப்பா… நடிகை ரெஜினாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

  • December 11, 2021 / 10:31 AM IST

கோலிவுட்டில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ரெஜினா கசாண்ட்ரா. 2005-ஆம் ஆண்டு வெளியான ‘கண்ட நாள் முதல்’ படத்தில் ஹீரோயின் லைலாவுக்கு தங்கையாக நடித்திருந்தார் ரெஜினா. இது தான் ரெஜினா நடிகையாக அறிமுகமான முதல் படமாம். அதன் பிறகு ‘அழகிய அசுரா’ என்ற படத்தில் கதையின் நாயகியாக வலம் வந்தார் ரெஜினா.

2013-ஆம் ஆண்டு ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ என்ற படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார் ரெஜினா. அப்படத்தில் ரெஜினாவின் நடிப்பு அனைவரையும் ஈர்த்தது. ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகை ரெஜினாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்ததாக இவரின் கால்ஷீட் டைரியில் ‘ராஜதந்திரம், மாநகரம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், MR. சந்திரமௌலி, சிலுக்குவார்பட்டி சிங்கம், சக்ரா, நெஞ்சம் மறப்பதில்லை, கசட தபற, முகிழ்’ என படங்கள் குவிந்தது.

ரெஜினா கசாண்ட்ரா தமிழ் மொழி மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். தற்போது, ரெஜினா நடிப்பில் ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், நடிகை ரெஜினாவின் சொத்து மதிப்பு ரூ.14 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

 

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus