‘கொரோனா’ பிரச்சனையால் இப்போது திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. அடுத்தடுத்து பல படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து செம பிஸியாக நடித்து வந்தார்கள் ஹீரோயின்ஸ். இந்த லாக் டவுன் டைமில் தான் நடிகைகளுக்கு அதிக நேரம் கிடைத்திருக்கிறது.
ஆகையால், இந்த நேரத்தை அவரவர்கள் தங்களுக்கு பிடித்தமான விஷயத்தில் கவனம் செலுத்தி லாக் டவுனை பயனுள்ளதாக மாற்றி வருகிறார்கள். சிலர், இதுவரை தெரியாத பல புதிய விஷயங்களையும் கற்றுக் கொண்டு வருகிறார்கள். ‘பரதேசி, மெட்ராஸ், ஒரு நாள் கூத்து’ படங்கள் மூலம் அதிக கவனம் ஈர்த்த நடிகை ரித்விகா.
இவர் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 2-வில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். இப்போது, ரித்விகா நடிப்பில் நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறது.
1
2
3
4
Concept & stylist @Njsatz
Photography @PrashunPrashant
Makeup & hair @Radhisss
Studio @Njsatz pic.twitter.com/jrRGNIZ6rh— Riythvika✨ (@Riythvika) August 15, 2020