நடிகையும், ஆந்திர மாநில நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ரோஜா, கடந்த மாதம் அவரது தொகுதியில் தண்ணீர், குழாய் திறக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இதில் அவர் இருபுறமும் மக்கள் மலர் தூவ, சினிமா பாணியில் வந்து மாலை மரியாதையோடு, தண்ணீர் குழாய் திறந்தார். ஊரடங்கு நேரத்தில், மக்கள் படும் அவதியை கண்டு கொள்ளாமல், இதுபோன்று அவர் செயல்பட்டது விமர்சனங்களுக்குள்ளானது. இந்நிலையில் இது குறித்து தொடரப்பட்ட வழக்கில், நடிகை ரோஜாவிற்கு ஆந்திர உயர் நீதி மன்றம் தற்போது விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ரோஜாவும் கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரமாக செயல்பட்டார். தொகுதியில் கொரோனா பாதிப்பு உள்ள இடத்தில் ரோஜாவே களத்தில் இறங்கி தானே கிருமி நாசினி மருந்துகளை தெளித்தார். அந்த வீடியோவும் சமூகவலைதளத்தில் வைரலாகி இருந்தது. பலரும் ரோஜாவின் செயலுக்கு பாராட்டு தெரிவித்தனர். அதனை தொடர்ந்து ரோஜா ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க நடந்து சென்றபோது வழியில் அவரது கட்சியினர் பூக்களை தூவினர். அதற்கு எந்த ஆட்சேபமும் தெரிவிக்காமல் நடந்து சென்ற. அந்த வீடியோவும் வைரலான நிலையில் நெட்டிசன்கள் ரோஜாவை கடுமையாக ட்ரோல் செய்தனர்.
இந்த வீடியோ வெளியாக, பலரும் தொடந்து தங்களுடைய கண்டனத்தை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இதை எதிர்த்து, கிஷோர் என்ற வழக்கறிஞர் ஆந்திர ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையை நேற்று நீதிமன்றம், காணொலி மூலம் நடத்தியது. ரோஜாவுக்கு மலர் தூவி வரவேற்பு கொடுக்கும் வீடியோவையும் பார்த்தார் நீதிபதி.
காணொளி காட்சி மூலமாக அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தேசிய தொற்று நிவாரண சட்டத்தை மீறிய ரோஜா உள்ளிட்ட 5 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது பற்றி ஆந்திர அரசு மற்றும் டிஜிபி ஆகியோர் ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.