சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. இப்போது இவர் நடிப்பில் ‘குஷி, சாகுந்தலம்’ என இரண்டு தெலுங்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘சாகுந்தலம்’ படத்தின் ரிலீஸுக்காக சமந்தாவின் ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
சமீபத்தில், இப்படம் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் 3டி-யில் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான குணசேகர் இயக்கியுள்ளார். இந்நிலையில், சமந்தா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கையில் ரத்தக் காயங்களுடன் இருக்கும் ஸ்டில்லை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி விட்டனர். சமந்தா நடித்து வரும் ‘சிட்டாடல்’ (ஹிந்தி) என்ற புது வெப் சீரிஸின் சண்டைக் காட்சியை படமாக்கும்போது இந்த காயம் ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இவ்வெப் சீரிஸை இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கி வருகின்றனர்.