தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்த”பானா காத்தாடி” என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நடிகையாக அறிமுகம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து தனக்கென பெரிய ரசிகர் பட்டாளத்தை தற்போது கொண்டுள்ளார் இவர்.
கடைசியாக இவர் பிரேம் குமார் இயக்கத்தில் 96 படத்தின் ரீமேக்கான “ஜானு” என்ற படத்தில் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து “காற்றுவாக்கில் இரண்டு காதல்” படத்தில் நடிக்கவுள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா விஜய் சேதுபதியுடன் இணைந்து இந்த படத்தில் நடிக்கவிருக்கிறார்.
தற்போது சமந்தா அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாகவும், அந்த திரைப்படத்தில் நடிகர் பிரசன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளதாகவும் தற்போது தகவல் வந்துள்ளது.
இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா அக்கினேனி அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு தன் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 13 மில்லியன் பாலோவர்ஸ்களை பெற்ற சந்தோஷத்தை வெளியிட்டு தன் ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டாடி வருகிறார்.
View this post on Instagram
13 million ♥️ #hugsandkisses #rockmyheart
A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on