பிரபல கன்னட நடிகையான சம்யுக்தா ஹெட்ஜ், ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளிவந்த “வாட்ச்மேன்” திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.
பின்பு அதே ஆண்டு பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த “கோமாளி” திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்பு வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் நட்டு தேவ் இயக்கத்தில் வெளிவந்த “பப்பி” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
கனடாவில் இவர் அறிமுகமான 2016 ஆம் ஆண்டு வெளிவந்த “கிரிக் பார்ட்டி” என்ற படத்தை தெலுங்கில் ரீமேக் செய்தபோது அந்த படத்திலும் இவர்தான் கதாநாயகியாக நடித்தார்.
மேலும் கனடாவில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் பங்கேற்றுள்ளார். சில படங்களில் மட்டுமே நடித்துள்ள இந்த அறிமுக ஹீரோயின், லாக்டவுனில் உடற்பயிற்சி செய்து அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு தனது நேரத்தை செலவிட்டு வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவா ராஜ்குமார் பிறந்தநாளையொட்டி ஹூப் ரிங் வைத்து நடனமாடி வாழ்த்துக்கள் வீடியோவை பதிவிட்டுள்ளார் சம்யுக்தா.இந்த வீடியோ கமெண்ட் செக்ஷனில் ஒருவர் “எந்தப் புது பட வாய்ப்பும் இல்லாததால் சர்க்கசில் இறங்கி விட்டீர்களா” என்று நக்கலாக கேள்வி கேட்டுள்ளார்.
அதற்கு சம்யுக்தா ஹெட்ஜ் “சமுதாய இடைவெளியை கடைபிடித்து புதிய திறமை ஒன்றை வளர்த்துக் கொள்வது தான் நோக்கம். இருந்தாலும் நன்றி, குடும்பத்தை விட்டு விட்டு ஒரு புதிய திறமையை வளர்த்து சர்க்கசில் வேலை செய்து அடுத்தவரை சந்தோஷப்படுத்துவது கூட ஒரு பெரிய கலைதான். அவர்கள்தான் உண்மையான கலைஞர்கள். இருந்தாலும் இது பற்றி உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை?” என்று அதிரடியாக பதிலளித்திருக்கிறார்.
இவர் அடுத்தடுத்து இரண்டு கன்னட படங்களில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.