மீண்டும் பரபரப்பில் மாட்டிக் கொண்ட நடிகை சஞ்சிதா ஷெட்டி!

  • December 9, 2020 / 11:33 AM IST

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகள் பட்டியலில் சஞ்சிதா ஷெட்டியின் பெயர் கண்டிப்பாக உண்டு. அவ்வப்போது ஏதேனும் ஒரு படத்தில் தலையை காட்டி பின்பு மறைகிறார் இவர்.

இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘சூதுகவ்வும்’ என்ற திரைப்படத்தில் நடித்து அந்த படத்தின் வெற்றிக்குப் பின் தொடர்ந்து சில தமிழ் படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் அவர் எந்த படத்திலும் நடிக்காமல் காணாமல் போனார்.

இந்நிலையில் சஞ்சிதா ஷெட்டியின் ஹாட் புகைப்படங்கள் இணையதளத்தில் படு வைரலாக பரவி வருகிறது. இதன் மூலம் பலரின் கவனத்தை தன் பக்கம் திருப்பியுள்ளார் நடிகை சஞ்சிதா ஷெட்டி.

இதைத்தொடர்ந்து தற்போது திருவண்ணாமலைக்கு சென்ற சஞ்சிதா ஷெட்டி அங்கு உள்ள தடையை மீறி, மகா தீபத்தை தரிசிப்பதற்கு மலையேறி சென்று அங்கு வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனால் இவர் மீது விரைவில் விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது‌. ஏதேனும் ஒரு சர்ச்சையில் அடிக்கடி மாட்டி வருகிறார் சஞ்சிதா ஷெட்டி என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus