முதன் முறையாக குழந்தையின் படத்தை வெளியிட்ட 90s ஹீரோயின்
May 20, 2020 / 09:55 PM IST
|Follow Us
குடும்பம், குழந்தை என செட்டில் ஆன 90களில் கொடிக்கட்டி பறந்த சங்கவி, தனது குழந்தையின் படத்தை வெளியிட்டு லைக்ஸ்களை அள்ளுகிறார்.
90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகைகளாக திகழ்ந்து வந்த நடிகைகள் தற்போது செகண்ட் இன்னிங்ஸ்சில் வலம் வந்தாலும், ஒரு சில நடிகைகள் எங்கு இருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை. அந்த வகையில், 90s கிட்களால் மறக்க முடியாத நடிகை சங்கவி, தனது 16 வயதில் அஜித்தின் அமராவதி படத்தில் நடித்து பிரபலமனார். அந்த படமே இவருக்கு அறிமுக படமாக இருந்தது.
அதன் பின், விஜய், ரஜினி, விஜயகாந்த், கமல் சரத்குமார், பிரபு, சத்யராஜ் என பலருடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு தனது 38 வயதில் மென்பொறியாளர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். 42 வயதாகும்
அவருக்கு அண்மையில் ஒரு பெண் குழந்தை பிறந்தது.
தற்போது குடும்பம், குழந்தை என செட்டில் ஆக, தன் 42 வயதில் முதன் முறையாக தன் குழந்தையின் படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது அந்தப்புகைப்படம் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. 90s கிட்ஸ்கள் சங்கவிக்கு தங்களது வாழ்த்துகளை
தெரிவித்து வருகின்றனர்.