சினிமாவில் 1997-ஆம் ஆண்டிலிருந்து 2001-ஆம் ஆண்டு வரை பிரபல ஹீரோயினாக வலம் வந்தவர் ஷாலினி. ஷாலினி ஹீரோயினாவதற்கு முன்பு, அவரது மூன்றாவது வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக ‘எண்டே மாமட்டுகுட்டியம்மாக்கு’ என்ற மலையாள திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு பல மலையாளம் மொழி படங்கள் மட்டுமின்றி தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்.
ஷாலினி தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடித்த முதல் படமே ‘தளபதி’ விஜய்யுடன் தான். அது தான் ‘காதலுக்கு மரியாதை’. இந்த படத்தை இயக்குநர் பாசில் இயக்கியிருந்தார். இப்படம் சூப்பர் ஹிட்டானதும் நடிகை ஷாலினிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘அமர்க்களம், கண்ணுக்குள் நிலவு, அலைபாயுதே, பிரியாத வரம் வேண்டும்’ என தமிழ் படங்கள் குவிந்தது.
அதன் பிறகு 2000-ஆம் ஆண்டு முன்னணி நடிகர் ‘தல’ அஜித்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஷாலினி. இவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், ‘அமர்க்களம்’ படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த சமயத்தில் அஜித்தின் பிறந்த நாளான மே 1-ஆம் தேதியன்று ஷாலினி அவருக்கு ஒரு கார் டிக்கி முழுக்க பல கிஃப்ட்ஸ் வாங்கி கொடுத்ததாக தகவல் கிடைத்துள்ளது. இது தான் அஜித்துக்கு ஷாலினி கொடுத்த முதல் கிஃப்ட்டாம். அந்த சமயத்தில் இருவரும் காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது.