ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்த ‘பிக் பாஸ்’ ஷெரினின் புதிய வீடியோ & ஸ்டில்ஸ்!

‘கொரோனா’ பிரச்சனையால் இப்போது திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. அடுத்தடுத்து பல படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து செம பிஸியாக நடித்து வந்தார்கள் ஹீரோயின்ஸ். இந்த லாக் டவுன் டைமில் தான் நடிகைகளுக்கு அதிக நேரம் கிடைத்திருக்கிறது.

ஆகையால், இந்த நேரத்தை அவரவர்கள் தங்களுக்கு பிடித்தமான விஷயத்தில் கவனம் செலுத்தி லாக் டவுனை பயனுள்ளதாக மாற்றி வருகிறார்கள். சிலர், இதுவரை தெரியாத பல புதிய விஷயங்களையும் கற்றுக் கொண்டு வருகிறார்கள். ‘துள்ளுவதோ இளமை’ என்ற தமிழ் படம் மூலம் ஃபேமஸான நடிகை ஷெரின்.

அதன் பிறகு ‘ ஸ்டுடண்ட் நம்பர் 1, விசில், கோவில்பட்டி வீரலட்சுமி, உற்சாகம், நண்பேன்டா’ போன்ற தமிழ் படங்களில் நடித்திருந்தார். ‘பிக் பாஸ்’ எனும் ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டு ரசிகர்களின் லைக்ஸை குவித்தார் ஷெரின். இந்நிலையில், இவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசத்தலான புதிய ஸ்டில்ஸ் மற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் மற்றும் வீடியோ ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறது.

https://www.instagram.com/p/CEO7feVlWzj/

Share.